பிரபல நடிகரின் அக்கா மற்றும் அண்ணன் அடுத்தடுத்து மரணம்- அதிர்ந்துபோன திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகரின் உடன்பிறந்த சகோதரர் மற்றும் சகோதிரி ஒரேநாளில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய்யுள்ளது.
 
death

திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வெங்கட். அதன்காரணமாகவே அவருக்கு போஸ் வெங்கட் என்கிற பெயர் நிலைத்துப்போனது.

சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஈரநிலம், சிவாஜி போன்ற படங்களில் போஸ் வெங்கட் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. 

இதுதவிர 2020-ம் ஆண்டு வெளியான ‘கன்னிமாடம்’ என்கிற படத்தையும் அவர் இயக்கியுள்ளார். ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

bose venkat family

அந்த படத்தை தொடர்ந்து அவர் மா.பொ.சி என்கிற படத்தை இயக்கியுள்ளார். அது இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் ஒரே நாளில் உடன்பிறந்த அக்கா மற்றும் அண்ணனை அடுத்தடுத்து இழந்துள்ளது.

இருவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போஸ் வெங்கட்டின் அக்கா வளர்மதிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி சென்னையில் காலமானார். அதேநாளில் நடந்த அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற போது போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் காலமானார். 

bose venkat

இதையடுத்து இவருடைய உடலையும் அறந்தாங்கிக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர், அங்கு வைத்து குடும்ப வழக்கப்படி இறுதி மரியாதை செய்கின்றனர். போஸ் வெங்கட்டின் சகோதரர் மற்றும் சகோதிரி அடுத்தடுத்து உயிரிழந்தது சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web