#BREAKING: பிரபல நகைச்சுவை கலைஞர் கோவை குணா காலமானார்..!!

 
1

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கோவை குணா. தனது தனித்துவ உடல்மொழியால் ரசிகர்களை ஈர்த்தவர். ‘சென்னை காதல்’ என்ற படத்தில் நடிகராக நடித்துள்ளார். ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் அவர் டைட்டில் வின்னரான இவர், கவுண்டமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை மிமிக்ரி செய்வதில் புகழ்பெற்றவர்.

உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது. காமெடி நிகழ்ச்சி மட்டுமின்றி திரைப்படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ள குணா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் காமெடி நிகழ்ச்சிக்காக செல்வதுண்டு.

இவரது மறைவு ரசிகர்களுக்கும், சக காமெடியன்களுக்கும், நடிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைபிரபலங்கள் பலரும் குணாவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

From Around the web