#BREAKING : பிரபல தெலுங்கு நடிகர் தாரகா ரத்னா காலமானார்..!!
தெலுங்கு சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் என்.டி.ஆர் எனப்படும் என்.டி ராமாராவ். தமிழ்நாட்டில் எம்ஜிஆரைப் போல தெலுங்கில் நடிகராக இருந்து ஆந்திராவின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்.டி.ஆர். அவரது பேரன் தாரகா ரத்னாவும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் .
இந்நிலையில், நடிகர்கள் பாலைய்யா , ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் உறவினரான தாரகா ரத்னா, சித்தூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்டார்.தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் நடைபயணம் சென்று கொண்டிருந்த தாரகா ரத்னா மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
தாரகா ரத்னா நடிகராக மட்டும் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியமான பிரமுகராகவும் காணப்படுகிறார். இந்நிலையில், அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் நடத்திய யுவகலாம் என்ற நடை பயணத்தில் தாரகா ரத்னா கலந்துகொண்டார். தொண்டர்கள், ரசிகர்களுடன் நடை பயணத்தில் பங்கேற்ற தாரக் ரத்னா, திடீரென மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார்.
பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இம்முறை அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவு என்டி ராமாராவ் குடும்பத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.