#BREAKING : பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்..!

இந்தி சினிமாவில் பல பிரபலமான படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் தீரஜ் குமார்.இவர் நடித்த ரோட்டி கப்டா அவுர் மகான் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானார் தீரஜ் குமார்.
நடிகர் என்பதை தாண்டி கிரியேட்டிவ் ஐ லிமிடெட் நிறுவனம் மூலம் தொலைக்காட்சி சீரியல்களை தயாரித்து வந்தார். ஓம் நம சிவாய், ஸ்ரீ கணேஷ், ஜெய் சந்தோஷி மா போன்ற பக்தி சீரியல்களை தயாரித்திருந்தார். இந்திய அளவில் இந்த சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்து சீரியல்களை தயாரித்து வந்தார்.
இந்த நிலையில் தான் சமீப காலங்களில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே தான், அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரின் உயிர் பிரிந்தது. இது பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.