அண்ணன் அண்ணி தயாரிக்க... தம்பி நடிக்க... கார்த்தியின் 27வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!
May 25, 2024, 06:05 IST

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி . இவரது நடிப்பில் உருவான கடந்த சில படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி வர கார்த்தியின் நடிப்பில் ஒரு தரமான படத்திற்காக ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.
அந்தவகையில் தற்போது கார்த்தியின் 27 ஆவது படம் குறித்த சூப்பர் டூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்குகிறார்.
ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகும் இந்த படத்தில் கார்த்தி, அர்விந்த் சாமிஉள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ‘மெய்யழகன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.