ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பா... அண்ணாமலையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!   

 
1
’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் தற்போது கதையின் போக்கே வித்தியாசமாக சென்று கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நல்லவர்களாக இருக்கும் முத்து, மீனா ஆகிய இருவருக்கும் தான் அடிக்கடி சோதனை வருகிறது என்பதும் இவர்கள் இருவர் மேல்தான் வீண் பழிச்சொல் வருகிறது என்பது போல்தான் கதை சென்று கொண்டிருக்கிறது.

முழுக்க முழுக்க நயவஞ்சகமாக செயல்படும் ரோகினியின் கேரக்டருக்கு அடுத்தடுத்து செல்வங்கள் குவிந்து வருவது, பாராட்டுக்கள் குவிந்து வருவதை பார்க்கும் போது நல்லவர்களுக்கு இந்த காலத்தில் நல்லதே நடக்காதா என்ற ஏமாற்றம் இந்த சீரியலை பார்ப்பவர்களுக்கு வந்துள்ளது.

இன்றைய எபிசோடில் ஏசியை அனுப்பிய ஸ்ருதி அம்மா மேல் தான் தவறு இருக்கும் நிலையில் அதை திருப்பி அனுப்பிய முத்து மீது எல்லோரும் குறை சொல்கிறார்கள். மற்றவர்கள் குறை சொன்னால் கூட பரவாயில்லை,  அண்ணாமலை கூட குறை சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் ’நானாக இருந்திருந்தாலும் ஏசியை திருப்பி தான் அனுப்பி இருப்பேன், எனவே முத்து செய்தது சரிதான் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால்  அண்ணாமலை முத்துவை பார்த்து நீ செய்தது தவறு என்று கூறியது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி மீனாவை கொடுமைப்படுத்தும் விஜயாவை அவர் கண்டிப்பதே இல்லை, அப்படியே கண்டித்தாலும் சரி விடு என்று மேம்போக்காக விட்டு விடுவார். மீனாவை விஜயா அவமதிக்கும் போது கூட விஜயாவை அவர் தட்டிக் கேட்பதில்லை. எனவே அவரது கேரக்டர் டம்மி ஆக்கப்பட்டு வருவதாகவும் அவரது கேரக்டரால் தான் அடுத்தடுத்து முத்து மற்றும் மீனாவுக்கு அதிக அளவு கஷ்டங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் பார்வையாளர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

எனவே சிறகடிக்க ஆசை கதை குழுவினர் முத்து, மீனாவுக்கு ஏற்படுத்திய சோதனை போதும் அடுத்த கட்டமாக ரோகிணி பக்கம் திரும்புங்கள் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web