எனக்கு கொரோனாவா ? இல்லவே இல்லீங்க - கஜேந்திரன் பேட்டி..!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினருக்கும் உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அவர் வெளியிட்ட வீடியோவில் "கஜேந்திரன் பேசுறேன். என் உடல்நலம் நலமாக இருக்கிறது. எனக்கு கொரோனாவும் இல்லை கொரோனவும் இல்ல. இது எல்லாம் புரளி. நீங்க தொடர்ந்து ஆதரவு கொடுக்கணும். பட வாய்ப்புகள் எனக்கு வரணும்... நன்றி என தெரிவித்துள்ளார்
"எனக்கு #கொரோனா தொற்று இல்லை" - இயக்குனர் மற்றும் நடிகர் #டிபிகஜேந்திரன்#TPGajendran #CoronaUpdate #Tamilnadu pic.twitter.com/oTTsJWKwMo
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) January 6, 2022