விக்ரம் படம் ஆரம்பிக்கலாமா..? தயாரான லோகேஷ்... உறுதி செய்யாத கமல்ஹாசன்..!

 
விக்ரம் படம் ஆரம்பிக்கலாமா..? தயாரான லோகேஷ்... உறுதி செய்யாத கமல்ஹாசன்..!

சட்டமன்ற வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளதை அடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படுவதற்கான தயார் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கைதி படத்தை கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு வழங்கியுள்ளது. இந்த படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு, படத்தின் தலைப்பும் வெளியிடப்பட்டது.

முன்னதாக 1986-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த படம் ‘விக்ரம்’. அதே பெயர் லோகேஷ் கனகராஜ் - கமல் கூட்டணியில் உருவாகும் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் அறிவிக்கப்பட்ட நாளில் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிமிட டீசரையும் வெளியிட்டு சர்பரைஸ் தந்தது படக்குழு.

ஆனால் அதை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி படத்தின் வேலைகளை படக்குழுவால் தொடங்கமுடியவில்லை. மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் விக்ரம் பட வேலைகள் மேலும் தள்ளிப்போனது.


தற்போது வாக்குப்பதிவு அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதனால் விக்ரம் படத்தின் வேலைகளை துவங்குவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதை குறிப்பிட்டு “ஆரம்பிக்கலாமா” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனிடம் வினவியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

From Around the web