இப்படியும் ஒட்டு போடலாமா..? ஜோதிகா எப்படி ஆன்லைனில் ஓட்டுப்போட்டார்?

 
1

சூர்யா, ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  36 வயதினிலே என்ற படம் மூலம் இரண்டாவது சுற்றை ஆரம்பித்த ஜோதிகா, வித்தியாசமான கதைகளை தேடி நடிக்க ஆரம்பித்தார். சினிமாவில் கவனம் செலுத்தும் ஜோதிகா, சூர்யா அவ்வப்போது அரசியல் குறித்தும் பேசி வந்தார்கள். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் குறித்து விமர்சனத்தை அடுக்கி வந்தார்கள்.

குறிப்பாக ஜோதிகா, கடந்த ஆட்சியின் போது கோவிலை கட்டுவதற்கு பதிலாக பள்ளிகளை கட்டுங்கள் என தெரிவித்தார். சூர்யாவும் விவாசயிகள் தோழன் என்பது போல் ஆட்சியை விமர்சனம் செய்து வந்தார். இவர்களி தாண்டி சூர்யாவின் அப்பா சிவகுமாரும், கார்த்தியும் ஆட்சியை விமர்சனம் செய்து தொடர் குரல்களை எழுப்பி வந்தனர். இந்த ஆட்சியில் மட்டும் சிவகுமார் குடும்பம் மௌனம் காத்து வருவதே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒரு பக்கம் சூர்யா குடும்பம் மும்பையில் வசித்து வந்தது பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் படத்தின் தமிழ் வெர்ஷனுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில், ஜோதிகா கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜோதிகா பதில் அளித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் ஓட்டு போட நீங்கள் வராது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, நான் தொடர்ந்து ஓட்டு போட்டு வருகிறேன். சில நேரங்களில், வேலைக்காக வெளியில் செல்வதால் என்னால் ஓட்டு போட வர முடியவில்லை. சில நேரங்களில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். இதெல்லாம் தனிப்பட்ட விஷயம், அதற்கு மதிப்பளியுங்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில்," ஆன்லைனில் கூட இருக்கில்ல" என்று கூறியது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் ஆன்லைனில் ஓட்டுப்போடும் முறை இல்லவே இல்லையே. அப்படியென்றால் ஜோதிகா எப்படி ஆன்லைனில் ஓட்டுப்போட்டார்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தேர்தலில் ஆன்லைனில் ஓட்டளிக்கும் முறை இருப்பது தெரியாமல் போச்சே.. இது தெரிந்து இருந்தால் நீண்ட வரிசையில் நிற்காமல் வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஓட்டு போட்டு இருப்பேனே எனக்கூறி ஜோதிகாவை கிண்டல் செய்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web