ஊரே கழுவி ஊற்றிய திரைப்படத்தை நீங்கள் புகழ்ந்து பேசலாமா சிவா அண்ணா..! 

 
1

அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தமிழகத்தில் இப்படத்தை கழுவி ஊற்றினார்கள். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இப்படம் மோசமாக இருக்கிறது என கூறி பதிவுகளை வெளியிட்டனர். தமிழகத்தில் மட்டுமே படுதோல்வியடைந்த அனிமல் திரைப்படம் உலகளவில், ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் இரண்டாம் பாகமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலவாறு பலரும் பேசும் போது நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அனிமல் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார். "இதில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா சார், உங்களுடைய Craft எனக்கு மிகவும் பிடிக்கும்.

உங்கள் படங்களில் நீங்கள் இசையை பயன்படுத்தும் விதமும் எனக்கு பிடிக்கும். அனிமல் படத்தில் அது பயங்கரமாக இருந்தது. படத்தை தாண்டி நீங்க கொடுக்கும் இன்டெர்வியூஸ் இன்னும் பயங்கரமாக இருக்கிறது சார். ரொம்ப ஸ்ட்ராயிட் போர்ஒர்ட ஆ இருக்கு" என கூறியுள்ளார். 

From Around the web