கேன்ஸ் திரைப்பட விருதுகள்... சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது!!

 
1

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி  உற்சாகமாக துவங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி வரை நடைபெற்றது.

விழாவில் கொரோனா தடுப்பு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். முத்தமிடுவது, அணைப்பது உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பிரான்சில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் இவ்விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார். புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படமான  டைட்டேன்-க்கு  வழங்கப்பட்டது.

விருதுகள்- விருது பெற்றவர்கள் விவரம்:

Palme d’Or
Titane, dir: Julia Ducournau

Grand Prize (TIE)
A Hero, dir: Asghar Farhadi,
Compartment No. 6, dir: Juho Kuosmanen

Best Director
Leos Carax, Annette

Best Screenplay
Ryusuke Hamaguchi, Drive My Car

Best Actress
Renate Reinsve, The Worst Person In The World

Jury Prize (TIE)
Ahed’s Knee, dir: Nadav Lapid
Memoria, dir: Apichatpong Weerasthakul

Best Actor
Caleb Landry Jones, Nitram

Camera d’Or
Murina, dir: Antoneta Alamat Kusijanovic

Short Film Palme d’Or
All The Crows In The World, dir: Tang Yi
Special Mention: August Sky, dir: Jasmin Tenucci

From Around the web