இனி விஷால் படத்தில் நடிக்க முடியாதா ? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி !!

விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களையும் தயாரிக்கிறார்.கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார் விஷால் 2019 ஆண்டு காலப்பகுதி வரை தலைவராக செலயலாற்றினார்.
குறித்த காலப்பகுதியில் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியை தவறாக பயன்படுத்தியதாக தற்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவது யாதெனில் சுமார் 12 கோடி ரூபாய் நிதி காணாமல் போயுள்ளதாகவும் அதை விஷாலிடம் கேட்டும் சரியான விளக்கம் ஏதும் கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர் நிர்வாகிகள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் "விஷாலை வைத்து படம் எடுப்போர், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்த பின் படமெடுக்க வேண்டும்"என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.இம் முடிவிற்கு தயரிப்பாளர் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர் சங்கம் என்பன பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியை கொடுத்துள்ளன.