சுந்தர்.சி நடிக்கும் தலைநகரம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்..!!

 
1

2006-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான படம் ‘தலைநகரம்’. இந்தப் படத்தில் வடிவேலு, ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த  நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று சென்னையில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இப்படத்தை வி. இசட் துரை  இயக்குகிறார். இதில் சுந்தர்.சி உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
 
தலைநகரம் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலு காமெடி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே தலைநகரம் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது குறித்து படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .

From Around the web