ஒருவழியாக தனுஷ் படக்குழு வழிக்கு வந்தது- ரசிகர்கள் உற்சாகம்..!!
தமிழில் வெளியான ராக்கி, சானி காயிதம் போன்ற படங்கள் மூலம் கவனமீர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இவருடைய இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ப்ரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர், டேனியர் பாலாஜி, விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இலங்கையின் வடமாராச்சி தாக்குதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த 1987-ம் ஆண்டுகளில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடந்து வந்தது. அப்போது வடமாராச்சியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாமை மனித வெடிகுண்டு கொண்டு புலிகள் தகர்த்தனர்.
இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர் தியாகம் செய்தவர் கேப்டன் மில்லர் என்று பின்நாளில் குறிப்பிடப்பட்ட வல்லிபுரம் வசந்தன். இந்த தாக்குதலை மட்டும் கருவாக எடுத்துக் கொண்டு, வேறொரு காலக்கட்டத்தில் வேறொரு இடத்தில் நடப்பது போன்ற கதையமைப்பில் கேப்டன் மில்லர் படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Captain Miller pic.twitter.com/5feD5IrIRG
— Dhanush (@dhanushkraja) June 27, 2023
தமிழக ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் கேட்டு கேட்டு தான் வாங்கி வருகின்றனர். படக்குழுவினருக்கு உரிய முறையில் புரோமேஷன் செய்ய வேண்டும் என்கிற எண்ணமே இல்லை என்று தோன்றுகிறது. தனுஷ் பிறந்தநாளான ஜூலை 26-ம் தேதி படத்தின் டீசர் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதற்கு முன்னதாக போஸ்டர் வெளியீடு, கேரக்டர் போஸ்டர்கள் வெளியீடு என்று பல ப்ரோமோஷன்கள் செய்ய வேண்டியது உள்ளது. இதுகுறித்து ரசிகர்கள் கடந்த சில நாட்களாக நடிகர் தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரனை டேக் செய்து நச்சரித்து வரத் தொடங்கினர். ஒருவழியாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 30-ம் தேதி கேப்டம் மில்லர் முதல் பார்வை போஸ்டர் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வுக்கு பிறகு படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 - cini express.jpg)