கேப்டன் விஜயகாந்த் இயக்குனர் எஸ்.ஏ.சி சந்திப்பு..!! 

 
1

1979-ஆம் ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.  சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், செந்தூரப்பூவே என அடுத்தடுத்து சூப்பர் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாக நடிகராக மாறினார். 

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவராகப் போற்றப்படும் விஜயகாந்த், தனது கட்சியான தேமுதிகவில் இணைந்து அரசியலிலும் முத்திரை பதித்தார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக அவர் நீண்டகால நோயினால் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவர் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார்.

1

கடந்த 1990-ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்துக்கொண்டார். இன்று ஜனவரி 31ஆம் தேதி விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவின் 33வது திருமண நாள். 1981 ஆம் ஆண்டு ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் விஜயகாந்துக்கு முதல் பெரிய பிரேக் கொடுத்த பழம்பெரும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சென்று விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From Around the web