தீவிர சிகிச்சை பெற்று வந்த கேப்டன் விஜயகாந்த் காலமானார்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த், தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் வாழ்விலும் மிடுக்கான நடைபோட்டு வந்தார் .
அரைசியலில் எம்.எல்.ஏவாகவும், எதிர்கட்சி தலைவராகவும் நேர்மையாக செயல்பட்ட கேப்டன் விஜகாந்த்தின் பாதையை பின்பற்றி கோடான கோடி ரசிகர்களும் தொண்டர்களும் தேமுதிகவில் தங்களை இணைத்துக்கொண்டனர் .
சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி தற்போது காலமாகி உள்ளார் .
கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இதையடுத்து விஜயகாந்தின் தொண்டர்களும் ரசிகர்களும் அவரது வீட்டிற்கு கண்ணீருடன் படையெடுத்து வருகின்றனர்