கேப்டன் விஜயகாந்திற்கு வழங்கப்படப்போகும் விருது! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரேமலதா !
Apr 29, 2024, 09:05 IST
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு இடையில் ஜெமினிகணேசன் வந்தது போன்றே ரஜனிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இடையில் போட்டியாக வந்தவர் நடிகர் விஜயகாந்த் ஆவார். இவர் சினிமாவில் பிரபாமானதும் அரசியலிலும் இறங்கினார். இவரது அன்பான குணங்களினால் தமிழ் நாட்டு மக்களால் மறக்கமுடியாத தலைவராக உள்ளார்.
இந்த நிலையிலேயே சென்னையில் தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மே 9ஆம் தேதியன்று பத்ம பூஷன் விருது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.
 - cini express.jpg)