கேப்டன் விஜயகாந்தின் கடைசி வரை நிறைவேறாத ஆசை..!
நடிகர் விஜயகாந்த் சுமார் 20,000 சதுர அடியில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகாலமாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்றது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டது.
விஜய்காந்த் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரமுடியாமல் போய்விட்டது.இதில் தான் விஜயகாந்த் குடிபெயரப்போவதாகவும் கூறியிருந்தார். காரணம், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கு வசதி இல்லை. இதனால் சந்தித்து விஜயகாந்த் அவர்கள் காட்டுப்பாக்கத்தில் சுமார் 20000 சதுர அடியில் புதிதாக விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வந்தார். சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் குடியேற வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே போனதாக கூறப்படுகிறது.