கேப்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு..!

விஜயகாந்த் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆன வல்லரசு திரைப்படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விஜயகாந்தின் ’வல்லரசு’. இதே நாளில் வெளியான விஜய்யின் ‘சச்சின்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதையடுத்து, ’வல்லரசு’ திரைப்படமும் விரைவில் ரீரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்துடன் தேவயானி நாயகியாக நடித்த இந்த படத்தில், ரகுவரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், பி. வாசு, சுந்தர்ராஜன், தலைவாசல் விஜய், பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
என். மகாராஜன் என்பவர் இயக்கத்தில் உருவான இந்த படத்தை, விஜயகாந்தின் மைத்துனர் எல்கே சுதீஷ் தயாரித்தார். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 ஆண்டுகளுக்கு முன் வெளியான ’வல்லரசு’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியான கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர்.