பிரபல இந்தி நடிகர் ஹேமந்த் குடும்பத்துடன் சென்ற கார் விபத்து..!

 
1

பிரபல இந்தி நடிகர் ஹேமந்த் பிரிஜி (வயது 56). இவர் 1985-ல் இந்தியில் வெளியான ‘அட்வென்ஜரஸ் டார்சன்’ என்ற பெயரில் வெளியான திரைப்படத்தில் ‘டார்சன்’ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.  

இந்நிலையில், நடிகர் ஹேமந்த் பிரிஜி நேற்று இரவு தனது மனைவி மற்றும் மகளுடன் புனேவில் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

1

அப்போது, உர்சி என்ற பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹேமந்த் பிரிஜி மற்றும் அவரது மனைவி ரேஷ்மாவுக்கு காயம் ஏற்பட்டது. ஹேமந்தின் மகளுக்கு இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து, காயமடைந்த ஹேமந்த் பிரிஜி மற்றும் அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web