படப்பிடிப்பில் நடந்த உயிரிழப்பு- மணிரத்னம் மீது வழக்குப்பதிவு..!

 
மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது குதிரை உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், அதுதொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த பொருட்செலவுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரலாற்று பின்னணியில் உருவாகும் படம் என்பதால், 80-க்கும் மேற்பட்ட குதிரைகள் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதில் கடந்த மாதம் 11-ம் தேதி ஒரு குதிரை எதிர்பாராத வகையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்திய விலங்குகள் நல வாரியம் உரிய விசாரணை நடத்துமாறு ஹைதராபாத்  மாவட்ட ஆட்சியருக்கும், தெலங்கானா விலங்குகள் நல வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது.

இதனால் பட இயக்குநர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக உரிய தகவல் அளிப்பவருக்கு ரூ. 25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.

From Around the web