நயன்தாரா இயக்குநருக்கு நடந்த சாதி மறுப்பு திருமணம்..!

 
இயக்குநர் வினோத்ராஜ் திருமணம்
அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் அறிவுநிலா இருவருக்கும் இயக்குநர் ராம் தலைமையில் சாதி மறுப்பு திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கூழாங்கல்’. பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு வரும் இப்படத்துக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்து வருகின்றன.

இந்த படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ். இவர் தன்னுடைய காதலி அறிவுநிலாவை சாதி மறுப்பு முறையில் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் இயக்குநர் ராம் மற்றும் அவருடைய மனைவி தலைமையில் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் பெண் வீட்டார் தொடர்பாக யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் பலரும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

From Around the web