டோலிவுட்டில் களைகட்டும் கொண்டாட்டம்...! ஒரே மேடையில் அண்ணன், தம்பி கல்யாணமா?

 
1

நாகர்ஜுனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் நாகர்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. 

தற்போது நாக சைதன்யாவின் தம்பி அகில் அகினேனிக்கும், ஓவியர் ஜெய்னப் ராவ்த்ஜிக்கும் நவம்பர் 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. நாகர்ஜுனா வீட்டில் நடந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டார்கள். அப்பொழுது எடுக்குப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சின்ன மருமகளை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். 

Naga Chaitanya and Sobhita Dhulipala: Is couple's engagement soiling  relationship between Akkineni and Daggubati families? - Masala.com

இந்நிலையில் அண்ணன் நாக சைதன்யாவின் திருமணத்தோடு சேர்த்து தம்பி அகிலின் திருமணத்தையும் ஒரே நாளில் நடத்துகிறார்கள் என தகவல் வெளியானது. ஒரே மேடையில் நாக சைதன்யா-சோபிதா, அகில்-ஜெய்னபை மணக்கோலத்தில் பார்க்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நாகர்ஜுனா கூறியிருப்பதாவது,

Naga Chaitanya's Brother, Akhil Akkineni Gets Engaged, Gifts His  Bride-To-Be A Huge Engagement Ring

இரண்டு திருமணமும் ஒரே நாளில் நடக்காது. அகிலின் திருமணம் 2025ம் ஆண்டு நடக்கும். அகிலை நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அகிலுக்கு மனைவியாகப் போகும் ஜெய்னப் நல்ல பெண். அவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆகையால் நாகசைத்தன்யா-சோபிதா திருமணம் முடிந்த கையேடு இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார். 

From Around the web