நடிகையின் மகளுக்கு பாலியல் தொல்லை- பிரபல நடிகர் போக்சோவில் கைது..!
 

 
பாலிவுட் நடிகர் பியர்ல் பூரி

படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது பிரபல நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை புகார் கொடுத்ததை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியில் ஒளிப்பரப்பான நாகின் 3 என்கிற தொடரில் நடித்து பிரபலமானவர் பியர்ல் புரி. மேலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார். மும்பையில் வசித்து வரும் இவருக்கு 31 வயதாகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு சீரியல் ஷூட்டிங்கில் இருந்த போது, சக நடிகையின் 5 வயது மகளுக்கு நடிகர் பியர்ல் புரி பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தற்போது புகார் தெரிவித்துள்ளார்.

இதனால் வழக்குப் பதிவு செய்த வசாய் காவல்துறை, வழக்கை வாலிவ் பகுதி போலீசாருக்கு மாற்றியது. அவர்கள் இதுதொடர்பாக விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர். தற்போது மும்பை அம்போலி காவல்துறை உதவியுடன் வாலிவ் போலீசார் நடிகர் பியர்ல் புரியை கைது செய்துள்ளனர்.

அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பியர்ல் புரியை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வசாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து பியர்ல் புரியை காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. 

From Around the web