பிரபல சீரியல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்..! குவியும் வாழ்த்துக்கள்..! 

 
1

விஜய் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான சீரியல் ஒன்று ’மெளன ராகம்’. இரண்டு பாகங்களாக ஒளிபரப்பான இந்த சீரியல் கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் அதன் பின் 2020 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.

முதல் பாகம் 863 எபிசோடுகளுக்கு பின் நிறைவு பெற்று அதன் பின் இரண்டாம் பாகம் 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட 500 எபிசோடு மேல் ஒளிபரப்பான நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சீரியல் முடிவடைந்தது.

இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாம் பாகத்தில் பிக் பாஸ் ரவீனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் ஷில்பா மற்றும் சல்மான் ஆகிய இருவரது கேரக்டர்கள் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சல்மான் மற்றும் ஷில்பா ஆகிய இருவரும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த சீரியலுக்கு ’எங்கேஜ்மென்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சீரியலுக்காக போட்டோஷூட் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட நிலையில் மணக்கோலத்தில் இருக்கும் இந்த புகைப்படங்களை இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் உண்மையிலேயே இருவருக்கும் ’எங்கேஜ்மென்ட்’ ஆகிவிட்டதாக நினைத்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ’எங்கேஜ்மென்ட்’ என்ற புதிய  சீரியலுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

From Around the web