கே.ஜி.எஃப் 2 படத்தை கைப்பற்றியை பிரபல தொலைக்காட்சி..!

 
கே.ஜி.எஃப் சேப்டர் 2

நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ’கே.ஜி.எஃப் சேப்டர் 2’ படத்தின் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிக்கான சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கே.ஜி.எஃப் 2. முன்னதாக வெளியான இந்த படத்தின் முதல் பாகம் மகத்தான் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தேசியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ளது.

கடந்தாண்டே இப்படத்துக்கான படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது. அதே நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் கே.ஜி.எஃப்- 2 படத்தின் புதிய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் தென்னிந்தியாவில் இந்த படத்திற்கான சேட்டிலைட் உரிமையை வாங்க பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன.

அதில் ஜீ நெட்வொர்க் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. அதன்மூலம் கே.ஜி.எஃப் 2 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிக்கான அனைத்து சேட்டிலைட் உரிமையையும் அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்திற்கான சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் கைப்பற்றியது. ஆனால் இரண்டாம் பாகத்திற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. 
 

From Around the web