மொத்தம் 18 இடங்களில் கத்தரி போட்ட சென்சார் போர்டு : லவ்வர் படக்குழு அதிர்ச்சி..! 

 
1
ஜெய் பீம் படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் நடிகர் மணிகண்டன். அதன் பின் குட் நைட் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 

இந்நிலையில், குட் நைட் படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படமான லவ்வர் படத்திலும் மணிகண்டன் நடித்துள்ளார்/

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியானது.

இந்நிலையில் படம் சென்சார் சான்றிதழுக்கு அனுப்பப்பட்டபோது 18 கெட்ட வார்த்தைகளை நீக்க சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்திற்கு யு/ஏ சான்றிதழையும் சென்சார் போர்டு வழங்கியுள்ளது.

From Around the web