”கைதட்டல் வாங்குவது ஒரு பெரிய போதை” விழாவில் கண்கலங்கிய செண்ட்ராயன்..!

 
”கைதட்டல் வாங்குவது ஒரு பெரிய போதை” விழாவில் கண்கலங்கிய செண்ட்ராயன்..!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்த செண்ட்ராயன், சுல்தான் படம் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் செண்ட்ராயன். அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர் கூடும், ரௌத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனமீர்த்தார்.

மேலும் மலையாளப் படங்களிலும் நடித்து அங்கேயும் பிரபலமானார். பெரும்பாலான மலையாளப் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்து தனித்து அடையாளம் பெற்றார். அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்துகொண்ட செண்ட்ராயன் மேலும் பிரபலமடைந்தார்.

கடந்த வாரம் வெளியான சுல்தான் படத்தில் செண்ட்ராயன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுதொடர்பான விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நல்ல படங்களில் நடித்து கைதட்டல் வாங்கிவிட்டு வீட்டில் பட வாய்ப்புள் இல்லாமல் வீட்டில் இருப்பது பெரிய வலி. நல்ல படங்களில் நடித்தேன். அது ரொம்ப பெரிய போதை. திரும்பி ஊருக்கே போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் சுல்தான் படம் என் கதாபாத்திரத்திற்கு நிறைய மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

From Around the web