ஒரு வாரத்திற்குள் சந்திரமுகி 2 படத்திற்கு இப்படி ஒரு நிலையா..!
 
​​​​​​​

 
1

 கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான மிக பெரிய ஹிட் படம் சந்திரமுகி. பாபா படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது…பல இடங்களில் ஓரு வருடம் கூட ஓடியது சந்திரமுகி.இதில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சூழலில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியிருக்கிறார் பி.வாசு..இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது…இன்று நிறைய தியேட்டரில் எடுத்தும் விட்டனர்…படம் அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறது…

லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸும், சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத்தும் நடித்திருக்கின்றனர். இவர்கள் தவிர படத்தில் ராதிகா, வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மெகா ஹிட்டடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.போன வாரம் வெளியான இப்படத்தை பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றனர் ரசிகர்கள் ஆனால் படம் தங்களை திருப்திப்படுத்த தவறிவிட்டதாக பெரும்பாலானோர் நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்…

ஒரு சிலரோ சந்திரமுகி முதல் படத்தின் பலமே ஜோதிகா ஏற்றிருந்த சந்திரமுகி கதாபாத்திரம் மற்றும் ரஜினிகாந்த் ஏற்றிருந்த வேட்டையன் கதாபாத்திரம்.ஆனால் இரண்டாம் பாகத்தில் அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் பயங்கரமாக வாசு சொதப்பியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

இன்று படம் நிறைய திரையரங்கில் எடுத்துவிட்டு புது படங்களை போட்டுவிட்டனராம்…அதனால் வசூல் மொத்தமாக குறைந்துவிட்டதாக தெரிகிறது..

From Around the web