விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது சந்திரமுகி 2..! 
 

 
1
 ‘சந்திரமுகி 2’ கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தில், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த பாகத்தையும் பி.வாசுவே இயக்கியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார்.படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. லைகா தயாரிப்பில் ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடி வசூலைக்கூட நெருங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web