இன்னும் வெளியாகாத சந்திரமுகி 2 படத்தை பார்த்து பிரபலம் சொன்ன முதல் விமர்சனம்..!  

 
1

2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள சந்திரமுகி மிக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும்,அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது…அதனை போல எக்கச்சக்க பாராட்டுகளும் பெற்ற படமாக இருந்தது…

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு ‘சந்திரமுகி 2’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் MM கீரவாணி தான் இசையமைத்து வருகிறார் அவர் RRR படத்திற்காக ஆஸ்கார் வென்ற நிலையில் சந்திரமுகி 2 மீதும் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் தான் சந்திரமுகி 2 முழு படத்தையும் பார்த்துவிட்டதாக கீரவாணி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்…இந்த ட்வீட் வைரல் ஆகி வருகிறது…


சந்திரமுகி 2 படத்தை பாத்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். நான் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன் என கீரவாணி கூறி இருக்கிறார். ..அதனால் படம் மிக பெரிய ஹிட் என அனைவரும் சொல்லி வருகின்றனர்..

From Around the web