விக்ரம் கதையில் நடக்கும் மாற்றம்: கமல் திடீர் முடிவு..!

 
விக்ரம் கதையில் நடக்கும் மாற்றம்: கமல் திடீர் முடிவு..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ள விக்ரம் படத்தின் கதையில் குறிப்பிட்ட மாற்றங்கள் தேவை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் புதிய திறமைசாலிகளுக்கு துணை நிற்கும் கமல்ஹாசன், தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜுக்கு வழங்கியுள்ளார். இந்த புதிய கூட்டணி கோலிவுட் சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விக்ரம் படத்திற்காக எழுதப்பட்டுள்ள் கதையில் சில மாற்றங்கள் தேவை என லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்துள்ளார் கமல். இதனால் இயக்குநர் குழு மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் விக்ரம் படத்தில் வில்லனாக ஃபகத் பாசில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியை படக்குழுவினர் அணுகியுள்ளனர். விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web