பிக்பாஸ் வீட்டுக்குள் சார்பட்டா பரம்பரை வில்லன்..!
 

 
சந்தோஷ் பிரதாப்
விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான நடிகர் போட்டியாளராக பங்கேற்கவுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் வரும் செப்டம்பர் இறுதி வாரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பிரியங்கா தேஷ்பாண்டே, சிவாங்கி, ரமேஷ் கண்ணா, ஆதித்யா பாஸ்கர் போன்றோட் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.

இவர்களுடன் சார்பட்டா பரம்பரை படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்கதை திரைக்கதை வசனம் இயக்கம், தாயம், பயமா இருக்கு, பஞ்சராக்‌ஷரம், ஓமை கடவுளே, இரும்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள், நிகழ்ச்சிக்குள் பிரவேசிக்கும் போது கொஞ்ச நாட்கள் அவர்கள் சமூகவலைதளங்களில் செயல்பட மாட்டார்கள். அதேபோல சந்தோஷ் பிரதாப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்தவித பதிவுகளும் சமீபத்தில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web