ஜூலை 22-ம் தேதி ஓடிடியில் ‘சார்பட்டா பரம்பரை’

 
1

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். காலாவிற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’.

இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவுடன், துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வரும் ஜூலை 22-ம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் ப்ரைம் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஆர்யாவின் மனைவி சாயிஷா ஆகியோரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளனர்.


 

From Around the web