ஓடிடி-யில் ரிலீஸாகும் சார்பட்டா: தேதி குறித்த படக்குழு..!

 
ஆர்யா

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா படம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகவுள்ளது. தற்போது இதனுடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருந்த குத்துச் சண்டையை மையமாக வைத்து பா. ரஞ்சித் இயக்கியுள்ள படம் ’சார்பட்டா பரம்பரை’. 

இப்படத்தில் ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் முன்னதாக திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதன் காரணமாக படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

தற்போது இதை உறுதி செய்யும் விதமாக ‘சார்பட்டா பரம்பரை’ படம் அமேசான் பிரைமில் வெளிவரவுள்ளது. வரும் ஜூலை 22-ம் தேதி இப்படம் நேரடியாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From Around the web