சேச்சி, சேட்டம்மா... மலையாளியாக மாறிய நடிகர் விஜய்..! 

 
1
 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த படம் காவலன். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். அதன் பிறகு அவர் எந்தப்பபடத்தின் படபிடிப்புக்காகவும் கேரளா செல்லவில்லை. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் அவர் பயணிக்கும் காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. 

இந்நிலையில்  படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் அதே வேளையில், தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டாடியுள்ளார் விஜய்.

இவ்வாறு நேற்றைய தினம் தனது ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசிய விஜய்யின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில்,

சேச்சி, சேட்டம்மா... உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஓணத்தின் போது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோலவே எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாருக்கும் கோடான கோடி நன்றிகள்.. தமிழ்நாட்டில் இருக்கும் எனது நண்பா, நண்பிகள் போல நீங்களும் வேற லெவலுக்கு உள்ளீர்கள். மீண்டும் சொல்கிறேன் உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்.. என உருக்கமாக பேசி உள்ளார்.


 


 

From Around the web