ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக பி.வி.ஆர் சினிமாஸ் செய்த காரியத்தை பாருங்கள்..!

 
PVRRR சினிமாஸ்

ராஜமவுலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான ப்ரோமோஷன்கள் இப்போதே தென்னிந்திய சினிமா உலகில் கலைக்கட்ட துவங்கிவிட்டன.

பாகுபலி வரிசைப் படங்களை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 850 திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளை நாட்டின் முன்னணி திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர் சினிமாஸ் தொடங்கியுள்ளது.


அதன்படி தன்னுடைய பெயரில் இருக்கும் பி.வி.ஆர் என்கிற வார்த்தையுடன் ஆர்.ஆர்.ஆர் பட தலைப்பையும் சேர்த்துக் கொண்டுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ஒரு படத்துக்காக ஒரு நிறுவனம் பெயரை மாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கான அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. திரையரங்க நிறுவன அதிகாரிகளுடன் இயக்குநர் ராஜமவுலியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் பெயருக்கு ஏற்றவாறு பி.வி.ஆர்.ஆர்.ஆர் சினிமாஸின் முத்திரையும் மாற்றப்பட்டுள்ளது. 
 

From Around the web