’செம்பியன் மாதேவி’ விமர்சனம் - மக்களுக்கான படம்..!

 
1

செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. 

இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். ஆரம்பத்தில் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்க, இருவரும் உடல் ரீதியாக ஒன்றினைந்து விடுகிறார்கள். இதனால், நாயகி கர்ப்பமடைந்து விடுகிறார். கர்ப்பமடைந்த நாயகி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனிடம் கேட்க, அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால், நண்பனின் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைக்கும் சாதி வெறிப்பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, அவரது காதல் வெற்றி பெற்றதா? என்பதையும், தலித் இளைஞரின் படுகொலைக்கான பின்னணி மற்றும் அதை தெரிந்துக் கொண்ட தந்தையின் நடவடிக்கையை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘செம்பியன் மாதேவி’.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபன், நாம் பத்திரிகை செய்திகளாக படித்து விட்டு கடந்து போகும் பல கசப்பான சம்பவங்களை அதிர வைக்கும் காட்சிகளாக நம் கண்முன் நிறுத்தி இதயத்தை கனக்க செய்திருக்கிறார். 

ஜெய்பீம் மொசக்குட்டியின் லீலைகள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும், நிறையவே முகம் சுழிக்க வைக்கிறது. ஆனால், நகைச்சுவை என்பதால் அவரது கள்ளத்தனத்தை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடலாம். மணிமாறன், ரெஜினா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். 

மொத்தத்தில், ‘செம்பியன் மாதேவி’ மக்களுக்கான படம்.
 

From Around the web