எம்பியும் எம்பியுமான கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலருக்கு சேரன் ஆதரவு!
 

 
1

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ட்விட்டரில் இருந்தே அதிரடியாக அவரது கருத்துகளுக்காக நீக்கப்பட்டார். பின்னர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கருத்துக்களை கங்கனா வெளியிட்டு வந்தார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த கங்கனாவுக்கு பாலிவுட்டில் மறைமுக ரெட் கார்டு விதிக்கப்பட்டு அவர் ஓரங்கட்டப்பட்டார். அவரது படங்கள் பெரிதாக ஒடாமல் தோல்வியை தழுவின.

இந்நிலையில், பாஜகவில் இணைந்து எம்பியாகி உள்ள கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்த போது குல்விந்தர் கவுர் எனும் பெண் காவலர் கங்கனாவை கன்னத்தில் மொத்த கை விரல்களும் பதியும் படி அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தரக்குறைவாக காசுக்காக போராடும் தீவிரவாதிகள் என கங்கனா பேசியதால் தான் அடித்தேன் என்றும் தனது அம்மாவும் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர் என குல்விந்தர் கவுர் விளக்கம் அளித்தாலும், பணி நேரத்தில் சொந்த விருப்பு வெறுப்புகளின் பெயரில் ஒரு பிரபலத்தை தாக்குவது தண்டனைக்குரிய செயல் என துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் சேரன், “இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off..” என இயக்குநர் சேரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சேரன் கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட கமெண்டுகள் அவரது ட்வீட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன. பலர் சேரனுக்கு இது தொடர்பாக கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web