கதாநாயகியாக களமிறங்கும் வாரிசு..!!

சின்னத்திரையின் நட்சத்திர தம்பதிகளின் ஒரே மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.
 
niyathi

தமிழில் 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் ‘96. விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவர்தர்ஷினி, ஜனகராஜ், கவுரி ஜி. கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இளம் வயது மற்றும் சிறு வயது என இரண்டு வேறு காலங்கட்டங்கள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதன்படி தேவர்தர்ஷினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் அவருடைய மகளான நியதி கடாம்பி நடித்தார். அது படத்துக்கு பெரிய பலம் சேர்த்தது. படத்தில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது. இதையடுத்து நியதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துள்ளன.

chetan

ஆனால் படிப்பை காரணம் காட்டி, அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது படிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதற்காக அவர் ஒரு தேர்ந்த போட்டோஷூட்டை மேற்கொண்டுள்ளார். அதை வைத்து படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதற்கான முயற்சிகளை நியதி மேற்கொண்டு வருகிறார்.

நியதியின் பெற்றோர்களான சேத்தன் மற்றும் தேவர்தர்ஷினி சின்னத்திரையில் கொடிக்கட்டி பறந்தவர்கள் ஆவர். மர்ம தேசம் விடாது கருப்பு தொடரில் நடித்த போது, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது சீரியல்களில் நடிக்காமல் இருவரும் படங்களில் மட்டும் நடித்து வருகின்றனர்.
 

From Around the web