செழியன் நிரந்தரமா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்க கவுன்சிலர் போடும் ஸ்கெட்ச்..சிக்கலில் பாக்யா.!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் செழியனை போலீஸ் பிடித்து போன விஷயம் தெரிந்து இனியா வீட்டுக்கு வருகிறாள். அப்போது அங்கு வரும் சுதாகர், உதவி செய்வதை போல் நடிக்கிறான். அவன் பேசினால் போலீஸ் விட்டுவிடுவார்கள் என்ற நிலையில், மினிஸ்டர் அளவுக்கு இந்த பிரச்சனை போயிடுச்சு என பில்டப் கொடுக்கிறான். அப்போது இனியா இதைப்பத்தி நியூஸ் போட சொல்றேன் என்கிறாள்.
உடனே சுதாகர் உஷாராகி அப்படியெல்லாம் பண்ணால் பெரிய பிரச்சனை ஆகிடும் என்கிறான். அதனை தொடர்ந்து பாக்யா அங்கிருந்து கிளம்ப, வேகவேகமாக ஈஸ்வரி வந்து எங்க போற? நீ போய் பிரச்சனையை பெரிசு பண்ணாத. பேசாம வீட்லயே இரு என்கிறாள். அதற்கு பாக்யா என் பையனை வெளிய கொண்டு வர, நான் ஏதாவது பண்ணனும் என சொல்லிவிட்டு கிளம்பி போகிறாள்.
இதனையடுத்து செல்வியை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறாள். கவுன்சிலர் மீது கேஸ் கொடுக்க பிளான் போட்டு இருக்கிறாள். இந்த மாதிரி கேஸ் கொடுத்தால் போதும். கவுன்சிலர் பேச்சுவார்த்தைக்கு வருவான். அப்போது செழியன் மீதான கேஸை வாபஸ் வாங்கி விடலாம் என நினைக்கிறாள். இதற்காக செல்வியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இருக்கிறாள் பாக்யா.
இன்ஸ்பெக்டர் வந்ததும் பாக்யா போய் புகார் மனுவை கொடுக்கிறாள். அதை வாங்கி பார்க்கும் அவர், முன்னாடி இருந்த கவுன்சிலர் உங்ககிட்ட பிரச்சனை பண்றாருன்னா, அப்பவே புகார் கொடுத்து இருக்கலாம்ல. இப்போ உங்க பையநை நாங்க பிடிச்சதும், பொய் கேஸ் கொடுக்குறீங்களா என கேட்கிறார். அதற்கு பாக்யா எந்த பிரச்சனையும் வேண்டாம்ன்னு தான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போ என் பையனே ஸ்டேஷன்ல இருக்கவும் தான், கேஸ் கொடுக்கிறேன் என்கிறாள்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் நான் விசாரிக்கிறேன் என சொல்கிறார். அப்போது செழியனை ஒரு தடவை பார்க்கணும் என பாக்யா கேட்க, அதெல்லாம் முடியாது என சொல்லி விடுகின்றனர். அதன்பின்னர் பாக்யா வீட்டுக்கு வரவும், செழியன் வரலையா என அனைவரும் கேட்கின்றனர். அந்த நேரத்தில் ஜெனியின் அப்பா ஜோசப் வந்து, என்ன நினைச்சுட்டு இருக்கீங்க என பாக்யா மீது கோபப்படுகிறான். என்னாச்சு என கோபி விசாரிக்கிறான்.
செழியன் நிரந்தரமா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கணும் சொல்லி இவுங்க முடிவு பண்ணிட்டாங்க. கவுன்சிலர் மேல் கேஸ் கொடுத்து இருக்காங்க என சொல்கிறான். இதனால் மீண்டும் அனைவரும் பாக்யாவை திட்ட ஆரம்பிக்கின்றனர். உடனே ஜோசப் நீ மொத நம்ம வீட்டுக்கு வா என ஜெனியை கூப்பிடுகிறான். ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம். அவ இங்க இருக்கட்டும் என சொல்கிறாள். ஆனால் ஜெனி அப்பா கூப்பிட்டதும் கிளம்பி போய் விடுகிறாள்.
இதனையடுத்து பாக்யா தன்னுடைய ரெஸ்டாரண்ட் ஓபன் பண்ணிய அமைச்சரிடம் உதவி கேட்க வருகிறாள். ஆனால் அவர் டெல்லி போய் இருக்கார். அதன்பின்னர் பாக்யா வேற வழியில்லாமல் கேஸை வாபஸ் வாங்கிவிட்டு, கவுன்சிலரை போய் பார்க்கிறாள். அவன் என்மேல கை வைச்ச உங்க பையன் ஜென்மத்துக்கும் வெளிய வர மாட்டான் என உறுதியாக சொல்கிறான். இதனால் பாக்யா கடும் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.