அம்மாவிற்காக கவுன்சிலரை அடித்த செழியன்.. உச்சக்கட்ட பரபரப்பு!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் ரெஸ்டாரண்ட்டை நான் பார்த்துக்கிறேன் என இனியா கேட்கவும், உங்கம்மா ஏதாவது சொன்னாங்களா என கேட்கிறான் சுதாகர். அதற்கு அவள் அப்படி எல்லாம் இல்லை என சொல்ல, நிதிஷின் அம்மா நம்ம வீட்ல இந்த பழக்கம் கிடையாது. இப்போ தான் ஹனிமூன் போயிட்டு வந்து இருக்கீங்க. அடுத்த சொந்தக்காரங்க வீட்ல விருந்து இருக்கு. போர் அடிச்சா டிவி பாரு, ஷாப்பிங் போ. பிசினஸ் பத்தி எல்லாம் நீ பேச வேண்டாம் என சொல்கிறாள்.
அதற்கு இனியா நான் இன்னும் என்னோட ரிப்போர்ட்டர் வேலையை விடலை. அதுக்காவது போறேன் என சொல்ல, சுதாகர் அதுவும் வேண்டாம் என கூறுகிறான். இனியா மீண்டும் கேட்க வர, அப்பா ஒரு விஷயம் சொன்ன கேட்டு பழகு. என்ன பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்க சத்தம் போடுகிறான் நிதிஷ். இதனால் இனியா ஷாக்காகி சரி அங்கிள் என சொல்லிவிட்டு உள்ளே போய் விடுகிறாள்.
இதனிடையில் ஈஸ்வரி உன் அம்மாவை ஹோட்டலை விட்டுட்டு வீட்டு வேலையை பார்க்க சொல்லு. வேலை ஆள் எல்லாம் வைச்சா சம்பளம் கொடுக்கனும். அவுங்க குழந்தைகளையும் சரியா பார்த்துக்க மாட்டாங்க என செழியன் தூண்டி விடுகிறாள். இதனால் அவன் அம்மாவை சந்தித்து பேசுவதற்காக ஹோட்டலுக்கு வருகிறான். அங்கு அவள் கஷ்டப்பட்டு வேலை பார்த்து கொண்டிருக்க, நீ ஏன்மா இவ்வளவு கஷ்டப்படுற என கேட்டுக்கொண்டு ஹோட்டலுக்கு வருகிறான்.
பாக்யா அவனிடம் இதை கேட்கத்தான் வந்தியா. உட்காருடா என சொல்லி கல்லா பெட்டியில் உட்கார வைக்கிறாள். உனக்கு காபி போட்டு தர்றேன் என்கிறாள். அந்த சமயத்தில் கவுன்சிலர் தனது ஆட்களுடன் அங்கு வருகிறான். கடை அடைக்கிற நேரத்துல வரக்கூடாதுன்னு சொன்னீங்கள மேடம். அதான் எட்டு மணிக்கே வந்துட்டேன். எங்க எல்லாருக்கும் இட்லி எடுத்துட்டு வாங்க என்கிறான். பாக்யாவும் அவர்களுக்கு சாப்பாடு எடுக்க உள்ளே போகிறாள்.
அப்போது கவுன்சிலர் ஆட்கள் நெறைய அசைவ ஹோட்டல் இருக்கு. இங்க எதுக்கு அண்ணே வர்றீங்க என கேட்கின்றனர். அப்போது அவன் இந்த ஹோட்டல்ல தான்டா நல்ல ஆண்ட்டி இருக்கு. அதான் வந்தேன் என்கிறான். அதனைக்கேட்டு செழியன் கடும் கோபம் அடைகிறான். கவுன்சிலர் விடாமல், ஆண்ட்டியை பத்தி விசாரிச்சுட்டேன். புருஷன் கூட இல்லையாம். கரெக்ட் பண்ணிடலாம் என்றெல்லாம் கண்டமேனிக்கு பேசுகிறான்.
இதனைக்கேட்டு உச்சக்கட்ட கோபம் அடையும் செழியன் பொறுக்கி நாயே என்னடா பேசுற என சட்டையை பிடிக்கிறான். இதனால் ஷாக்காகும் கவுன்சிலர் யார் சட்டையை பிடித்த என கோபப்பட, சத்தம் கேட்டு பாக்யா வருகிறாள். அவர்களை பார்த்து ஷாக்காகி என்னடா ஆச்சுய் என கேட்க, செழியன் எதையும் காதில் வாங்காமல் கவுன்சிலரை பொளந்து கட்டுகிறான். அடிக்க வந்த கவுன்சிலர் ஆட்களையும் வெளுத்து வாங்குகிறான்.
அப்போது ஏரியா ஆட்கள் எல்லாரும் வந்து தடுத்து நிறுத்துகின்றனர். அந்த கவுன்சிலர் என்மேலயே கை வைச்சுட்டீல. உன்னை என்ன பண்றேன் பாரு என கோபமாக சொல்லிவிட்டு போகிறான். பாக்யா என்னடா ஆச்சு? எதுக்காக இவ்வளவு கோபப்படுற என கேட்க, உன்னால தான் அம்மா எல்லாமே. பேசாம போயிடு என கோபமாக சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். இதனையடுத்து எழிலுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறாள் பாக்யா.
அதன்பின்னர் அவள் வீட்டுக்கு போக மொத்த குடும்பமும் செழியன் சுற்றி உட்கார்ந்து இருக்கிறது. என்னடா பிரச்சனை என ஒவ்வொருவராக கேட்க, அவன் அம்மாவை ஆண்ட்டின்னு சொல்றான். கரெக்ட் பண்ண போறேன்னு கண்டமேனிக்கு பேசுறான் என கடும் கோபத்துடன் சொல்கிறான். இதனைக்கேட்டு ஆவேசம் அடையும் எழில், எவன்டா அது. சும்மா விட்டயா எனக்கேட்டு அவனும் கோபமாக கிளம்புகிறான். கோபி அவனை அமைதியாக இருக்கும்படி சமாதானம் செய்கிறான்.
உடனே ஈஸ்வரி உன்னால தான் பாக்யா எல்லா பிரச்சனையும். நீதான் பிரச்சனைல போய் மாட்டிட்டு வருவ. இப்ப உன்னால செழியன் சிக்கல்ல இருக்கான். இன்னையோட ஹோட்டலை இழுத்து மூடிட்டு, நாளைல இருந்து வீட்ல இருக்க. இல்லன்னா நடக்குறதே வேற என திட்டுகிறாள். ஜெனியும் அந்த ஏரியாவே ஒரு மாதிரிதான் இருந்தது ஆண்ட்டி என சொல்ல, கோபியும் அட்வைஸ் பண்ணுகிறான். இப்படியாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.