மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!
 

 
1

கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் டி.பி.கஜேந்திரன். கடந்த 1988-ம் ஆண்டு வெளியான ‘வீடு மனைவி மக்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம், பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாதன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்தர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

TP Gajendran

இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை காலமானார். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, இவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். 



கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

From Around the web