”காம வெறியர்களை கேட்கவில்லை” வைரமுத்துவை துவம்சம் செய்த சின்மயி..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு வைரமுத்து கவிதை வடிவில் வாழ்த்து பதிவிட்டு உள்ளார். அதை ட்விட்டரில் டேக் செய்த பாடகி சின்மயி, வைரமுத்து போன்றோர் எப்படி பெண்கள் நலன் மற்றும் உரிமை சார்ந்த விஷயங்களை பேச முடியும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். 
 
சின்மயி மற்றும் வைரமுத்து

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கவிதையை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 8-ம் தேதி உலக மகளிர் தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறை வீராங்கனை மற்றும் வீரர்கள் என பல தரப்பினர் மகளிர் நலனை விரும்பி பல்வேறு வாழ்த்துக்களை பதிவு செய்தனர். 

அந்த வரிசையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில்,

மாலையும் நகையும்
கேட்கவில்லை பெண்;
மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்
விரும்பவில்லை பெண்;
கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்
ஆசைப்படவில்லை பெண்;
நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;
அவளே பாதுகாப்பாள்
ஆண்களையும்

உலக
மகளிர் திருநாள் வாழ்த்து

#மகளிர்தினம் | #WomensDay

என்கிற கவிதையை எழுதி பதிவிட்டு இருந்தார். இதை ட்விட்டரில் டேக் செய்த பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரத்து எவ்வாறு பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து பேசலாம் என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பதிவிட்டார். 

சின்மயி

அதன்படி, 

அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது 
காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள். 
பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதறு கேட்கவில்லை பெண்;
நியாயம் கேட்கிறாள். 

என்று காட்டமாக சின்மயி பதிவிட்டுள்ளார்.


வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சின்மயி முன்வைத்ததை அடுத்து, அவருக்கு எதிராகவும் ஆதாரவாகவும் பல கருத்துக்கள் எழுந்தன. அதிலும் வைரமுத்துவின் ஆதாரவாளர்கள் அவரை தரக்குறைவாக விமர்சித்து சமூகவலைதளங்களில் சாடி வந்தனர்.

எனினும், அதை பொருட்படுத்தாமல் கல்வி, பணியிடங்கள், பொது இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் அம்பலப்படுத்தி வருகிறார். மேலும் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பெண்களின் நலனுக்கான பணிகளில் சின்மயி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

From Around the web