தெலுங்கு சினிமா நடிகர் சங்க தேர்தல்- சூப்பர் ஸ்டார் ஆதரவு யாருக்கு தெரியுமா ?
 

 
சிரஞ்சீவி மற்றும் பிரகாஷ் ராஜ்

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அவர் ஆதரவு கொடுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு இருக்கும் வரவேற்பு தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தலுக்கும் உள்ளது. அங்கு இருமுனை போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு அணியில் நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் மற்றொரு அணியில் பிரகாஷ் ராஜ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இதில் முக்கிய நடிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை பொறுத்து எந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார் என்பதை சொல்லிவிட முடியும். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கவனமீர்த்துள்ளது.

எதிர்முனையில் போட்டியில் நடிகர் விஷ்ணு மஞ்சு, தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். நடிகர்கள் மோகன் பாபு மற்றும் சிரஞ்சீவிக்கு இடையில் உரசல் போக்கு உருவாவதும், பிறகு சரியாவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.

அதுபோன்ற முன்னதாக அவர்கள் இருவருக்குமிடையில் மோதல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் மோகன்பாபு நடிப்பில் வெளியாகும்‘சன் ஆஃப் இந்தியா’ பட டிரெய்லருக்கு குரல் கொடுத்தும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிரஞ்சீவி.

அதனால் இம்முறை நடிகர் சங்க தேர்தலில் விஷ்ணு மஞ்சுவுக்கு தான் சிரஞ்சீவியின் ஆதரவு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார் சிரஞ்சீவி. இதற்கான காரணத்தை அறிந்திட தெலுங்கு திரையுலகம் முயன்று வருகிறது.

From Around the web