மீண்டு வந்த சாய் தரம் தேஜ்- கேக் வெட்டி கொண்டாடிய சிரஞ்சீவி குடும்பம்..!

 
சாய் தரம் தேஜை வரவேற்ற சிரஞ்சீவி குடும்பத்தினர்

பைக் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சாய் தரம் தேஜ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள புகைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் கேபிள் மேம்பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற சாய் தரம் தேஜ் கோரமான பைக் விபத்தில் சிக்கினார். இதனால் சுயநினைவை இழந்த அவர் உடனடியாக அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்க் அனுமதிக்கப்பட்டார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தங்கை மகன் தான் சாய் தரம் தேஜ். இவருடைய விபத்து தெலுங்கு சினிமா உலகையே உலுக்கியது. தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு சில நாட்களின் சுயநினைவு திரும்பியது.


தற்போது முழுமையாக குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார். அவரை நடிகர் சிரஞ்சீவி,அல்லு அர்ஜுன்,பவன் கல்யாண், ராம் சரண்,வைஷ்ணவ் தேஜ், வருண் தேஜ் உள்ளிட்டோர் கேக் வெட்டி வரவேற்றனர். இந்த புகைப்படத்தை நடிகர் சிரஞ்சீவி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

From Around the web