மீண்டும் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி..!

 
மகனுடன் சிரஞ்சீவி

வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடித்து வரும் சிரஞ்சீவி, அடுத்ததாக மீண்டும் அஜித் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆச்சார்யா’ திரைப்படம் விரைவில் வெளியாகிறது. கொரோனா காலக்கட்டத்துக்கு முன்னதாக இந்த படத்தின் பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் திரையரங்குகள் திறக்கப்படாததால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

நாடு முழுவதும் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் விரைந்து இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் ரீமேக்காகும். மோகன்லால் நடித்த வேடத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்துக்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் மற்றொரு படம் ‘போலோ சங்கர்’. இது தமிழில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காகும். லக்‌ஷ்மி மேனன் நடித்த வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் புதியதாக தயாராகும் படத்தில் நடிப்பதற்கு சிரஞ்சீவி தேதிகள் ஒதுக்கியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த படம் தமிழில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.
 

From Around the web