கிராஃபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் வெளியாகும் ஹாலிவுட் படம்..!!

ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகி வரும் ஓப்பன்ஹெய்மர் படம் குறித்து இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
oppenheimer

அமெரிக்காவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் உலகளவில் பிரபலமானவர். அவருடைய இன்செஃப்ஷன், தி டார்க் நைட், இண்டர்ஸ்டெல்லர் போன்ற படங்கள் உலகளவில் இருக்கும் திரை ஆர்வலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. 

கடைசியாக அவருடைய இயக்கத்தில் வெளியான டெனெட் படத்தில் டிம்பிள் கபாடியா உள்ளிட்ட சில இந்தியர்கள் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இதையடுத்து நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. 

இரண்டாம் உலகப் போருக்கு வேண்டி அணுகுண்டு தயாரிக்க உதவிய இயற்பியலாளர் ஜே. ராஜபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து இப்படம் உருவாகிறது. இதில் நடிகர் சிலியன் மர்பி நடிக்கிறார். 'அயர்ன்மேன்' புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.

வரும் ஜூலை 21-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கிறிஸ்டோபர் நோலன், படத்தில் ஒரு கிராஃபிக்ஸ் காட்சியும் இருக்காது. ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் அணுகுண்டு வெடிப்பு சோதனையை மீட்டுருவாக்கம் செய்த காட்சியிலும் கூட கிராஃபிக்ஸ் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
 

From Around the web