சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை..!

 
1

ஒரு விஜேவாக அறிமுகமான வி.ஜே சித்ரா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வந்தார். அது மட்டும் அல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் தான். இதற்கு முன்பு அவர் எத்தனையோ சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருந்தாலும் அதையெல்லாம் கிடைக்காத பெயரையும் புகழையும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக பெற்றிருந்தார். இப்ப வரைக்கும் இந்த சீரியலில் 3 முல்லைகள் வந்திருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் பலருக்கும் முல்லை என்ற பெயரை சொன்னதும் விஜே சித்ராவின் பெயர் தான் நினைவிற்கு வரும்.

எப்போதுமே துரு துருவென இருந்த வி ஜே சித்ரா சமூக வலைத்தளத்திலும் அதிகமாக ஆக்டிவாக இருந்தார். ஷூட்டிங்கில் இல்லாத நேரங்களில் போட்டோ சூட்டில் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பதிவிட்டு, சமூக வலைத்தளத்தில் அவரிடம் பேசும் ரசிகர்களிடம் நேரடியாகவே பேசி வந்தார். அது மட்டுமல்லாமல் இவருடைய பெயரில் பேன்ஸ் பேஜ்களை தொடங்கும் ரசிகர்களுக்கு அவர் பிறந்தநாளுக்கு எல்லாம் நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து வந்தார். ஆனால் திடீரென யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். அவருடைய மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற விவாதம் இப்ப வரைக்கும் நடந்து தான் வருகிறது.
 

இந்நிலையில், பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 25ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என் மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

சித்ரா மரணத்துக்கு ஒரு முக்கிய அரசியல்வாதி, போதை கும்பல், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் தான் காரணம். அவர்கள் மிகுந்த பணபலம் மிக்கவர்கள். அவர்களை நான் ஒன்றும் செய்ய முடியாது. எனது மனைவியின் தற்கொலைக்கு பின்னால் பணபலமிக்க மாஃபியா கும்பல் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொன்னால் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன் சாதாரண மனிதன் என்னால் என்ன செய்ய முடியும்? அப்படி செய்தாலும் என் மனைவி எனக்கு திரும்பி கிடைக்க மாட்டாள். தற்போது என் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கவே வாழ்ந்து வருகிறேன் எனக் கூறியிருந்தார்

இந்த நிலையில் காவல்துறையினர் சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என இந்த வழக்கின் தீர்ப்பு திருவள்ளூர் மகிலா விரைவு நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் திருவள்ளூர் மகிளா நீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்டார்.

From Around the web