மகள் குறித்து மிகவும் உருக்கமாக பதிவிட்ட பாடகி சித்ரா..!!

தமிழ் மற்றும் மலையாளம் திரைத்துறைகளில் சின்னக் குயில் என்கிற அடையாளத்துடன் கொண்டாடப்படுவர் சித்ரா. இசைத்துறையில் 40 ஆண்டுகளாக கோலோச்சி நிற்கும் சித்ரா, மக்கள் மனதில் நிற்கும் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இதுவரை அவர் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை தனது பாடல்களுக்காக 6 முறை தேசிய விருதினை வென்றுள்ளார். அண்மையில் இவருடைய குரலில் வெளியான வாரிசு படப் பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு எழுந்தது. விரைவில் வெளிவரவுள்ள ‘பொன்னியின் செல்வன் - 2’ படத்தில் கூட ஒரு பாடலை அவர் பாடியுள்ளார்.
நடிகை சித்ரா மற்றும் அவர் கணவர் விஜய் சங்கருக்கு கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி நந்தனா என்கிற பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2011-ம் ஆண்டு துபாயில் நடந்த விபத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழந்தார். அன்று முதல் பல்வேறு குழந்தைகளுக்கு அவர் உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் 14-ம் தேதி குழந்தை நந்தனா இறந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மகளின் புகைப்படத்துடன் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.